ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், பிணை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோரின் சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.