தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

தெஹிவளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.