நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது

நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது

யேமனில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது, அவரைத் தூக்கிலிடுவது ஒன்றே தமக்குத் தேவை என்று நிமிஷாவால் கொலையுண்டதாகக் கூறப்படுபவரின் சகோதரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனுக்கான இழப்பீட்டையோ வேறு எந்த நிவாரணத்தையோ பெறுவதற்குத் தமது குடும்பத்தவர்கள் தயாராக இல்லை என்று கொலையுண்டவரின் சகோதரரான அப்துல் பத்தா மஹதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஒன்மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியாவுக்கான மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது எமக்குத் தெரியாது. எவ்வாறேனும் அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எமக்குக் கிடையாது.

இதுவிடயத்தில் எந்தவித நல்லிணக்கத்திற்கோ சமரசத்திற்கோ இடம் கிடையாது. சிறிது கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், மரண தண்டனை என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று அப்துல் பத்தா மஹதி உறுதியாகக் கூறியுள்ளார்.

பிரியாவைக் காப்பாற்றுவதற்காக கேரளத்தின் முக்கிய இஸ்லாமிய தலைவர் தலையிட்டிருக்கிறார். அவரது தலையீட்டினால் மரண தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் இடமில்லை என்று அப்துல் பத்தா தெரிவித்திருப்பது மீண்டும் பிரியாவின் குடும்பத்தவர்கள், பிரியாவின் உயிரைக் காப்பாற்றப் போராடுவோர் கவலையடைந்துள்ளனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.