ஏமனில் உயிர் தப்புவாரா நிமிஷா பிரியா என்ற கேள்வி கேரள மக்கள் மத்தியில் பரபரப்பாகியுள்ளது.
தமது வர்த்தக பங்குதாரரான யேமன் பிரஜை ஒருவரைக் கொலை செய்தார் என்று மரண தண்டனைக்கு ஊள்ளாகியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா.
இவருக்கு நாளைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரவிக்கின்றன.
ஏமனில் நிமிஷாவைக் காப்பாற்றும் இயக்கத்தினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளும் இந்திய அரசின் தலையீடும் மரண தண்டனையை ஒத்திவைக்க உதவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு தலையிட்டு நிமிஷாவைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2017இல் ஏமன் நாட்டுப் பிரஜையான தனது பங்காளரை நிமிஷா ஊசி ஏற்றிக் கொன்றதாகவும் அவரது உடல் வீட்டின் நீர்த்தாங்கியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
2020 இல் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவரைக் காப்பாற்ற அவரின் உறவினர்கள் போராடி வருகின்றனர். 2014இல் உள்ளூர் போர் ஆரம்பமானதால், இராஜதந்திர நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய உள்ளிட்ட எந்த நாடுகளின் தூதரகங்களும் அங்கு இல்லை. சவூதி ஆதரவு அரசாங்கத்தைக் கவிழ்த்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் சனா நகரைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர்க்கும் முயற்சிகளில் சர்வதேச மன்னிப்புச் சபையினரும் ஈடபட்டுள்ளனர்.
தமது மகள் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது வீட்டை விற்றுவிட்டுத் தற்போது ஏமனில் தங்கியிருந்து நிமிஸாவின் தாயார் கடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். நிமிஸாவின் கணவர் பிள்யையுடன் கேரளாவில் இருக்கிறார்.
ஏமன் சட்டத்தின்படி முறைப்பாட்டுப் பிரிவினர் நட்டஈட்டை ஏற்றுக்கொண்டு மன்னிக்கும் பட்சத்தில் விடுதலை உண்டு என்று 1999இலிருந்து அங்கு வாழ்ந்துவரும் திரு. ஜோசப் சிஎன்என் செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.
ஏமன் அமைப்பினருடன் சேர்ந்து பிரியாவைக் காப்பாற்றும் இயக்கத்தின் சார்பில் இதுவரை 58 ஆயிரம் அமெரிக்க டொலர் சேகரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அளவுக்கதிகமான மயக்க மருந்தை ஊசிமூலம் செலுத்தி நிமிஷா தமது வர்த்தக பங்காளரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் தற்காப்புக்காகவே அவ்வாறு செய்தார். நிமிஷாவின் கடவுச்சீட்டைப் பலவந்தமாக வைத்துக்கொண்டு சித்திரவதை செய்திருக்கிறார்.
வழக்கு விசாரணை அரபு மொழியில் நடத்தப்பட்டது. மொழிபெயர்ப்பும் வழங்கப்படவில்லை. ஆகவே, நாம் நிமிஷாவைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டள்ளோம். இறைவன் துணையிருப்பான் – என்று ஜோசப் கூறுகிறார்.
நிமிஷாவைக் காப்பாற்ற தலையிடுமாறு கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஏமனில் உயிர் தப்புவாரா நிமிஷா? என்ற கேள்விகள் எழுப்பப்படும் சூழலில் நிமிஷாவுக்குத் தண்டனை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்கள் கூறுகின்றன.
ஏமனில் உயிர் தப்புவாரா நிமிஷா? என்ற கேள்வி வலுவடைந்திருக்கும் நிலையில் பல தரப்பினாலும் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் மஸ்லியார், மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
அவர் ஏமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களைத் தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
செவிலியரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால் செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஜூலை 16-இல் நாளை நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த செவிலியர் நிமிஷா பிரியா?

முதல் முதலாக 2008 இல் உள்ளூர் மருத்துவமனையொன்றில் தாதியாகப் பணியாற்றுவதற்காகவே நிமிஷா ஏமன் சென்றார்.
பின்னர், குடும்பத்தவர்கள், நண்பர்கள் முதலானோரின் உதவியுடன் ஏமனில் தனியாக ஒரு கிளினிக்கை அவர் ஆரம்பித்திருக்கிறார்.
ஏமனில் தனியாக வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதென்றால், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் பங்காளராக இருக்க வேண்டும். அதனால், அந்நாட்டுப் பிரஜை ஒருவரைத் தனது பங்குதாரராக சேர்த்துக்கொண்டார்.
உள்நாட்டுப் போர் ஆரம்பித்தபோது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் நகரைக் கைப்பற்றினர். அநேகமானே வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.
எனினும், நிமிஷா தொடர்ந்தும் ஏமனில் தங்கியிருக்க முடிவு செய்தார். அப்போதுதான் அந்த ஏமன் நாட்டுக்காரர் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் என்று சீஎன்என் தகவல் திரட்டியிருக்கிறது.
கடந்தாண்டு மரண தண்டனை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியலில் ஏமன் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மன்னிப்புச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில் உயிர் தப்புவாரா நிமிஷா? என்ற கேள்விகள் எழுப்பப்படும் சூழலில் நிமிஷாவுக்குத் தண்டனை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்கள் கூறுகின்றன.

