மத்திய மாகாண தமிழ் மொழித் தினவிழா இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
அகில இலங்கை தமிழ் மொழி தினத்தை ஒட்டிய மத்திய மாகாணப் போட்டிகளும் தமிழ் மொழித் தின விழாவும் இரஜவலை இந்து தேசிய கல்லுரியில் இன்று (12.07.2025) சனிக்கிழமை நடைபெற்றன.
மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் பெ.விக்னேஸ்வரன், வத்துகாமம் கல்வி வலய மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஐ.ஹாசிம், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பன்விலை ம.நவநீதன்
















