திருக்கோவில் மண்டானை மக்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் மண்டானை கிராமத்தில் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு வைபவம் நேற்று நடைபெற்றது.
அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் 04 மண்டானை கிராம சேவையாளர் பிரிவில் காணி, வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு காணியும் புதிய வீடுகளும் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வானது திருக்கோவில் 04 கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணை ஒழுங்கமைப்பில் திருக்கோவில் மண்டானை கிராமத்தில் நடைபெற்றது.

இவ் வீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக கனடா புலம்பெயர் தமிழ் சமூகத்தினரின் நிதிப் பங்களிப்புடன் தலா ஒரு வீட்டுக்கு 11இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீட்டுக்கும் காணிக்குமான அனுமதிப் பத்திரங்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
கனடா அன்புநெறியின் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தன், கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக செயற்பாட்டாளர் லோஜி முதலானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு

