வவுனியா சம்பவம் குறித்து விசாரணை

வவுனியா சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா- கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரைப் பொலிஸார் கைதுசெய்யச்சென்றபோது அவர் வீழ்ந்து மரணமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் நேற்றிரவு அங்குப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்றதால், அவரைக் கைதுசெய்யத் துரத்தியபோது அந்த இளைஞர் சைக்கிளிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், பொதுமக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்த இளைஞரைத் துரத்திச் சென்றதோடு சக்கரத்தில் தடித்துண்டொன்றைப் பொலிஸார் எறிந்ததால், அவர் நிலைதடுமாறி வீழ்ந்து இறந்தார் என்று சொல்லிப் பொதுக்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கலவர நிலையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானைத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் களேபரத்தில் பொலிஸார் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடப்பதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.