பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.