13392 மாணவர்களுக்கு ஏ சித்தி

வெளியாகியுள்ள க. பொ. த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 13392 மாணவர்களுக்கு ஏ சித்தி பெறுபேறு கிடைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளைப் பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,

13392 மாணவர்களுக்கு ஏ சித்தி கிடைத்துள்ளபோதிலும் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34% என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மாகாண ரீதியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு:

மேல் 74.47%
மத்திய 73.91%
தெற்கு 75.64%
வடக்கு 69.86%
கிழக்கு 74.26%
வடமேல் 71.47%
வட மத்திய 70.24%
ஊவா 73.14
சப்ரகமுவ 73.47%

பாட வாரியாக சித்தி சதவீதம்:

பௌத்தம் – 83.21%

சைவநெறி – 82.96%

கத்தோலிக்கம் 90.22%

கிறிஸ்தவம் 91.49%

இஸ்லாம் 85.45%

ஆங்கிலம் 73.82%

சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%

தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%

வரலாறு 82.17%

அறிவியல் 71.06%

கணிதம் 69.07%

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.