யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்க டிரம்ப் திட்டம்

யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்க டிரம்ப் திட்டம்

அதிபருக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்க டிரம்ப் திட்டம் வகுத்து வருவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் பதவிக்குத் திரும்பிய திரு டிரம்ப் முதல் முறையாக அவ்வாறு செய்கிறார்.

ர‌ஷ்யா, அண்டை நாடான உக்ரேன்மீது படையெடுத்து மூவாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.

இந்நிலையில், திரு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் கிடங்கிலிருந்து எந்த ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்புவது என்பதை அடையாளம் காண்பதாகக் கூறப்படுகிறது.

அது கிட்டத்தட்ட $30 மில்லியன் டாலராக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.

வலுப்பெற்றுவரும் ர‌ஷ்யத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவி செய்யும் வகையில் கூடுதல் ஆயுதங்களை அனுப்பி வைக்கப்போவதாகத் திரு டிரம்ப் ஜூலை 7ஆம் திகதி கூறினார்.

ஆனால் சரியாக எந்தெந்த ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தகவல் அறிந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அது இடம்பெறும் என்றார்.

இதுவரை முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கிய ஆயுதங்களை மட்டுமே டிரம்ப் நிர்வாகம் உக்ரேனுக்கு அனுப்பியது.

அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களை அவசர காலத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு அனுப்ப அதிபருக்கு அதிகாரம் அனுமதிக்கிறது.

எனினும் உக்ரேனைத் தற்காக்க திரு டிரம்ப் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

உக்ரேனுக்கான $3.8 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் அதிபருக்கு இருக்கும் அதிகாரத்தில் எஞ்சியுள்ளன. அதற்கமைய யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்க டிரம்ப் திட்டம் வகுக்கிறார்.

இதற்குமுன் ஜனவரி 9ஆம் திகதி திரு பைடன் $500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்ப ஒப்புதல் அளித்தார்.

திரு பைடன் ஒப்புதல் வழங்கிய சில முக்கிய ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பாமல் டிரம்ப் நிர்வாகம் இந்த மாதம் நிறுத்திவைத்திருந்தது. அவை பின் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்க நாடாளுமன்றம் $175 பில்லியன் மதிப்பிலான நிவாரண, இராணுவ உதவித் திட்டங்களை உக்ரேனுக்கு ஒதுக்க இதற்குமுன் ஒப்புதல் அளித்திருந்தது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.