சுக்கானில் தூங்கிய வான் சாரதி!

சுக்கானில் தூங்கிய வான் சாரதி!

சுக்கானில் தூங்கிய வான் சாரதி! 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த சம்பவம் இன்று காலை நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணித்த எட்டுப் பேர் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.

அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (10) காலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வானின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.