விஜய் சேதுபதியின் படம் ஐந்து மொழிகளில்

பூஜையுடன் தொடங்கியது புதிய படத்துக்கான படப்பிடிப்பு. விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். - படம்: ஊடகம்
விஜய் சேதுபதியின் படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியின் நடிப்பில் அண்மையில் ‘ஏஸ்’ படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘தலைவன் தலைவி’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். ஜூலை 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் ‘டிரெயின்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
‘டிரெயின்’ படத்தையும் தன் கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பல இந்திய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஹைதராபாத்தில் பூசையுடன் தொடங்கியுள்ளன.
அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கு ஒன்றில் விஜய் சேதுபதி, சம்யுக்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
விஜய் சேதுபதியின் படம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
