கொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம்

நீர்கொழும்பு பகொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம்

இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்ற கொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.

கொஸ்கம சுதுவெல பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

30 வயது தாய், 12 வயது மகள் 44 வயது ஆடவர் அடங்கலாக மூவர் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கைத் துப்பாக்கியால் அவர்களைச் சுட்டுள்ளனர்.

காயமடைந்த மூவரும் அவிசாவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025