போர்விமானங்களை இயக்கும் முதல் பெண்

போர்விமானங்களை இயக்கும் முதல் பெண்

இந்திய கடற்படையின் போர்விமானங்களை இயக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அஸ்தா பூனியா பெற்றிருக்கிறார்.

இந்திய கடற்படை பெண் அதிகாரியான அஸ்தா பூனியா, கடற்படையின் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்தச் சாதனையைப் புரியும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்திய இராணுவத்தின் துணை லெஃப்டினென்ட்’ஆகப் பணியாற்றுகிறார் அஸ்தா பூனியா.

போர் விமானிக்கான பயிற்சி வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, எதிர்காலத்தில் அவரால், இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்டுள்ள ‘மிக்-29 கே’, ‘ரஃபேல்’ ஆகிய போர் விமானங்களை இயக்க முடியும்.

இந்திய இராணுவ விமானிகளுக்குக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அதிநவீன ‘ஜெட்’ போர் பயிற்சி விமானமான ‘ஹாக் 132’ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது பயிற்சியை முடித்துள்ள அஸ்தா பூனியாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இவரது சாதனையை அடுத்து, இந்தியக் கடற்படையில் பெண் போர் விமானிகளுக்கான தடை நீங்குவதுடன் புதிய சகாப்தம் ஆரம்பமாகுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

போர்விமானங்களை இயக்கும் முதல் பெண் என்ற விருதுடன் பயிற்சியை முடித்துள்ள அஸ்தா பூனியாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025