முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய்

முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய்

முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயைத் தெரிவு செய்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை, பனைவூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், இன்று (04) தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்போம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025