காவத்தை ஓஐசி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம்

காவத்தை ஓஐசி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சாதாரண பொலிஸ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
காவத்தை – எந்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து காவத்தை பொலிஸ் நிலைய ஓஐசி (பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 30 ஆம் திகதி இரவு எந்தானை பகுதியில் பொலிஸ் சீருடையில் சென்ற சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமுற்றார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைசெய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காவத்தை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
