இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம்

இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ITC லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் தலைவருமான சஞ்சீவ் பூரி தலைமையிலான இந்திய தொழில்துறை சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளடங்கிய பேராளர்கள் 2025 ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூலை 02 ஆம் திகதி வரையில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயமானது இலங்கை ஜனாதிபதி 2024 டிசம்பரில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வழங்கப்பட்டிருந்த அழைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விருந்தோம்பல் தொழில்துறை, உற்பத்தி துறை, சக்தி துறை, சுகாதார பராமரிப்பு, ஆடை உற்பத்தி, சுற்றுலாத்துறை உட்பட பரந்த அளவிலான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் 15 பேர் இக்குழுவில் அங்கம் வகித்திருந்தனர்


இந்த விஜயத்தின் போது இந்திய தொழில்துறை சம்மேளன பேராளர்கள் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பினை பெற்றிருந்தார்கள்.
இச்சந்திப்புகளில் பொருளாதார கட்டமைப்புகள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வெளிப்படையானதும் நேர்மையானதுமான வர்த்தக செயற்பாடுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அவற்றிற்கு ஆதரவாகவும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வினைத்திறன்மிக்க நடவடிக்கைகள் தொடர்பாக இப்பிரதிநிதிகளுக்கு தலைமைத்துவத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக வலுச்சக்தி அமைச்சர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர், தொழில் அமைச்சர் & பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர், வர்த்தக, வியாபார, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உட்பட இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு சிரேஷ்ட அமைச்சர்கள் உத்தியோகத்தர்களுடனும் இப்பேராளர்கள் பரந்தளவிலான பேச்சுக்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடல்களின் போது முதலீட்டினை முன்னணியாகக் கொண்ட ஒத்துழைப்புகள் மற்றும் துறைகள் ரீதியான பங்குடைமைகளுக்குரிய வாய்ப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது
விஜயத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக இலங்கை வர்த்தக சமூகத்துடன் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ITC இரத்தின தீப ஹோட்டலில் ஜூன் 30 ஆம் திகதி அன்று பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்றி அதிகாரியும் தலைவருமான திரு கிரிசான் பாலேந்திரா பங்கு கொண்டிருந்தார்.
இந்த வட்டமேசை கலந்துரையாடலில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் காணுதல் போன்ற விடயங்களில் மிகவும் ஆழமான உள்நோக்குகள் முன்வைக்கப்பட்டு கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்த உரையாடல்களில் கலந்து கொண்டார். இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம் மேற்கொண்டமை சிறப்பம்சம் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தருணத்தினை குறிக்கும் முகமாக அரசியல் தலைவர்கள் வர்த்தக பிரமுகர்கள் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற கலந்துரையாடலுடனான வரவேற்புபசாரம் ஒன்றும் உயர்ஸ்தானிகரால் நடத்தப்பட்டிருந்தது
இந்த நிகழ்வில் இலங்கை முழுவதும் உள்ள தொழில்துறை சம்மேளனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்
இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளடங்கிய பேராளர்கள் மேற்கொண்டிருந்த இந்த விஜயத்தின் போது பரஸ்பர நலன்கள் அடிப்படையில் பொருளாதார தொடர்புகள் மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை வலுவாக்குவதற்குரிய பல்வேறு பகுதிகள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் இந்திய தொழில்துறை சம்மேளனம் போன்ற முக்கியமான இந்திய வர்த்தக அமைப்புகளின் அர்ப்பணிப்பானது ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் பொருளாதார உறவுகளை மேலும் வலுவாக்குவதற்கும் முதலீடுகளை அடிப்படையாகக் கொண்ட பங்குடைமையினை மேம்படுத்துவதற்கும் இந்தியா இலங்கை இடையிலான ஒத்துழைப்புக்குரிய புதிய துறைகளை அடையாளம் காண்பதற்கும் அவசியமானது என விஜயத்தின் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்திய – இலங்கை தலைவிகள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தல்
