மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இருவர் பலி

மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இருவர் பலி

யாழ்ப்பாணம்: மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இருவர் பலி யாகியுள்ளனர்.

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மாடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று மாலை 6.30 அளவில் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது, எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காவத்தை ஓஐசி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025