எலோன் மஸ்க்கிற்கு ரணில் நன்றி

எலோன் மஸ்க்கிற்கு ரணில் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் அனைவருக்கும் ஸ்ரார்லிங்க் செய்மதி இணைய சேவையைப் பெற்றுக்கொடுத்தமைக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவுநரும் நிறைவேற்று அதிகாரியுமான எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அவரைச் சந்திப்பதற்கும் இலங்கையில் டிஜிற்றல் தொழினுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் திரு. ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2024இல் இந் தோனேசியாவின் பாலியில் நடந்த பத்தாவது சர்சதேச நீர் மாநாட்டில் எலோன் மஸ்க்கைச் சந்தித்ததையடுத்து இலங்கையில் ஸ்ரார்லிங்க் இணைய சேவையைப் பெறும் நடவடிக்கை ஆரம்பமானது.

இப்போது ஸ்ரார்லிங்க் செய்மதி இணைய சேவை இலங்கையில் அறிமுகமாகியிருககிறது.

அதற்கான தொழினுட்பக் கருவி சுமார் 118,000 ரூபாய் எனவும் மாதாந்த கட்டணம் 12 ஆயிரம் ரூபாய் எனவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

மஸ்க் தென்னாபிரிக்காவுக்கு மூட்டைகட்ட வேண்டும்!

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025