அஜித்குமார் கொலை: எடப்பாடி கடும் கண்டனம்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் பொலிஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கூற்றுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நடக்காதது நடந்துபோச்சு. என்ன வேண்டுமானாலும் செய்யச் சொல்கிறேன். மன்னியுங்கள் “என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்களிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி திரு. பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள பதிலில் முதலமைச்சரரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“கொலை செய்தது உங்கள் அரசு. அதற்கு மன்னிப்பு என்றால் சரியாகிவிடுமா? அஜித்குமாரின் குடும்பத்திற்குத் தைரியமே அவர்தான். அவர்களின் தைரியத்தைக் கொலை செய்துவிட்டுத் தைரியமாக இருங்கள் என்று கூறுகிறீர்களே! நா கூசவில்லையா? “
என்று திரு. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
