மஸ்க் தென்னாபிரிக்காவுக்கு மூட்டைகட்ட வேண்டும்!

எலோன் மஸ்க்கிற்கு ரணில் நன்றி

அமெரிக்கா மானியம் வழங்காவிட்டால் எலோன் மஸ்க் தென்னாபிரிக்காவுக்கு மூட்டைகட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வரிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், தாம் புதுக்கட்சி தொடங்கப்போவதாக எலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்துள்ள அமெரிக்க அதிபர், அமெரிக்கா அவருக்கு மானியம் வழங்கவும்தான் தனது வர்த்தகத்தைக் கட்டிக்காத்துக்கொண்டார். இல்லாவிட்டால், தனது சொந்த நாடான தென்னாபிரிக்காவுக்கு மூட்டைகட்ட வேண்டி வந்திருக்கும்.

உலகில் எந்தவொரு மனிதனுக்கும் கிடைக்காத மானியம் எலோன் மஸ்க்கிற்குக் கிடைத்தது. இல்லாவிட்டால் அவருக்கு டெல்சாவும் இல்லை ஸ்பேசும் இல்லை என்று கடுந்தொனியில் திரு. டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டிரமப் முன்வைத்த வரிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, தாம் முன்பு சொன்னபடி புதுக்கட்சி தொடங்கப்போவதாக எலோன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

அப்படி நடந்தால் எலோன் மஸ்க் தென்னாபிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல நேரிடும் என்று அமெரிக்க அதிபர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025