இஸ்ரேலிய பிரதமர் டிரம்பைச் சந்திக்கின்றார்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.
காஸாமீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் நெட்டன்யாகுவின் பயணம் இடம்பெறுகிறது.
ஜூலை 7ஆம் திகதி திரு நெட்டன்யாகு அதிபர் டிரம்ப்பைச் சந்திப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நெட்டன்யாகுவை இரண்டு முறை அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
திரு டிரம்ப் காஸா போரை நிறுத்துவதில் குறியாக உள்ளார் என்றும் வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“தினமும் காஸாவில் நடக்கும் சம்பவங்கள் மனத்தை வேதனைக்கு உள்ளாக்குகிறது, போரை நிறுத்துவதற்கு அதிபர் டிரம்ப் முன்னுரிமை தருகிறார்,” என்றும் வெள்ளை மாளிகை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதமும் ஏப்ரல் மாதமும் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து இஸ்ரேலிய பிரதமர் டிரம்பைச் சந்திக்கின்றார் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், காஸாவில் ஜூன் 30ஆம் திகதி இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 51பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் 2023 அக்டோபர் மாதம் ஹமாஸ் தரப்பு நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதோடு 251 பேர் பிணை பிடிக்கப்பட்டனர்.
இதையடுத்து காஸாமீது இஸ்ரேல் போர்தொடுத்தது. அதில் ஏறக்குறைய 56,500 பேர் கொல்லப்பட்டனர்.
