முதலாவது லயன்ஸ் ஆளுநர் Dr. பத்மநாதன்

IMG-20250701-WA0005

புதிய லயன்ஸ் 306 D12 மாவட்டத்தின் முதலாவது லயன்ஸ் ஆளுநர் லயன் Dr. K. M. பத்மநாதன் MJF, MAF இன்று சம்பிரதாய முறைப்படி புதிய லயன்ஸ் 306- D12 மாவட்டத்தின் ஆளுநராகப் பதவியேற்கிறார்.

இல 125, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள லயன்ஸ் மாவட்ட செயலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவதுடன், இன்று மாலை 04.00 மணிக்கு புதிய 306-D12 லயன்ஸ் மாவட்ட செயலகம் தனது பணியை செவ்வனே ஆரம்பிக்கின்றது.

அத்துடன் இன்றைய தினம் புதிய 306-D12 லயன்ஸ் மாவட்ட புதிய லயன்ஸ் மாவட்ட செயலகத்தில் பல சேவைகள் வடமாகண 306-D12 லயன்ஸ் மாவட்டத்தின் கழகங்களினால் வழங்கப்படுகிறது.

இதுவரை 306-B1 லயன்ஸ் மாவட்டத்தில் இணைந்து இயங்கிய வடமாகாணத்தின் அனைத்து லயன்ஸ் கழகங்களும் இன்று முதல் புதிய 306-D12 லயன்ஸ் மாவட்டத்துடன் இணைந்து இயங்கும்.

         புதிய உதயம் 

01.07.2025 செவ்வாய்ககிழமை இன்று மலர்ந்திருக்கின்ற புதிய 306 D12 லயன் மாவட்டத்தின் லயன் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் புதிய பயணத்தில் சேவையின் வெற்றியை நோக்கிப் பயணிக்கவும் எமது மாவட்டம் வெற்றிகரமாக முன்னேறுவது உங்கள் கைகளில் உள்ளது.

என்னுடன் நீங்கள் அனைவரும் இணைந்து உங்கள் ஒத்துழைப்பைச் செயல் வடிவமாக வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Lion. Dr.K.M.பத்மநாதன் MJF, MAF
லயன்ஸ் ஆளுநர் 2025 – 2026
மற்றும் லயன்ஸ் சீமாட்டி LION. பத்மாதேவி.
புதிய 306-D12

யாழ் மனோ

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025