மின் கட்டண திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரண்

மின் கட்டண திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரண் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதலைப் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகள் திருத்தப்பட்டால் இந்த மீறல்கள் பொருந்தாது எனவும் பிரதி சபாநாயகர் அறிவித்தார்
