முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முனனாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82ஆவது வயதில் கொழும்புவில் காலமானார்.

கொழும்புவில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் முன்னாள் அரசியல்வாதியுமான காமினி லொக்குகே இறக்கும் போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக செயற்பட்டார்.

பல ஆண்டுகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட காமினி லொக்குகே, விளையாட்டுத்துறை, வலுச்சக்தி, போக்குவர்த்துத்துறை போன்ற துறைகளில் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினராக பல தடவைகள் தேசிய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025