தங்காலையில் மற்றொரு படகு விபத்து

தங்காலையில் மற்றொரு படகு விபத்து ஏற்பட்டு மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக இன்று காலை தங்காலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

கல்லொன்றில் தனது இழுவைப்படகு விபத்துக்குள்ளானபோது மீனவர்கள் காணாமற்போனதாக அந்தப் படகின் உரிமையாளர் இன்று அதிகாலை பொலிஸில் முறையிட்டிருக்கிறார்.

இதனடிப்படையில் தங்காலை கடற்படை முகாமுக்கும் அறிவிக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேவேந்திரமுனையில் நேற்று ஒரு படகு விபத்துக்குள்ளாகி ஆறு மீனவர்கள் காணாமற்போயிருந்தனர். அதில் மூவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

காணாமற்போன மீனவர்கள் மூவரின் சடலங்கள் மீட்பு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025