சமரபாகு சீனா உதயகுமார் நூல் வெளியீடு

சமரபாகு சீனா உதயகுமார் நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை ஆறாந்திகதி ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெறுகிறது.
உதயகுமார் எழுதிய பாடல்களால் பேசுகிறேன் நூல் வெளியீடு அன்றைய தினம் வல்வெட்டித்துறை சமரபாகுவில் உள்ள நூலாசிரியரின் இல்லத்தில் பிற்பகல் மூன்று மணி தொடக்கம் மாலை 4.30 வரை நடைபெறுகிறது.
நூல்வெளியீட்டுக்கு யாழ். குடத்தனை கரையூர் அ. மி. த. க பாடசாலை அதிபர் மு. கதிர்காமலிங்கம் தலைமை வகிக்கிறார்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த. ஜெயசீலன் வெளியீட்டுரை நிகழ்த்துகிறார்.
சமூக செயற்பாட்டாளர்கள் திருவாளர், திருமதி ஆனந்தநேசன் தம்பதியர் முதற்பிரதியைப் பெறுகிறார்கள்.
யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ. குமரன் நயவுரை ஆற்றுகிறார்.
ஈழத்துக் கலை இலக்கியப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – கலை இளவரசன் – கலாநிதி வன்னியூர் செந்தூரன் கருத்துரை வழங்குகிறார்.
நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை வல்வெட்டித்துறை சமரபாகு கலை இலக்கிய வட்டம் மேற்கொண்டுள்ளது.

மதிமுரசு
