தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்

தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்

தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம் என்றும் அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் களுத்துறை பகுதியில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன ஆறு கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல் 412 உலங்கு வானூர்தியையும் ஒரு Y-12 விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிறப்பு தேடுதல், மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படகும் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025