அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை

அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை

அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எதிர்பார்த்த எதனையும் ஈரான் மீதான தாக்குதலில் அடையவில்லை என்று 12 நாள் போருக்குப் பின்னர் நேற்று முதற்தடவையாக காணொலி மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆயத்துல்லா அலி கொமெய்னி அந்தக் காணொலியை எங்கிருந்து பதிவு செய்து வெளியிட்டார் என்ற தகவல் எதுவும் வௌியாகவில்லை என்று பீபீசி செய்தி கூறுகிறது.

ஆன்மிகத் ததலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி ஆழமான பாதாள அறையொன்றில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய புரட்சிப் படையின் தளபதிகள் கொல்லப்பட்டதன் பின்னர் புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஆன்மிகத் தலைவருக்குமான தொடர்பாடல் இல்லையென்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுவதாக அல்-ஜசீரா தெரிவிக்கின்றது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025