ஈரான் விஞ்ஞானிகளைக் கொல்லும் சதிமுயற்சி முறியடிப்பு

ஈரான் விஞ்ஞானிகளைக் கொல்லும் சதிமுயற்சி முறியடிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொலை செய்யும் நோக்கத்தில் இஸ்ரேல் பத்தாயிரம் உளவு ட்ரோன்களை ஏவியிருந்தரது. அவை அனைத்தையும் அழித்து இஸ்ரேலின் சதியை முறியடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஏற்கனவே நடத்திய தாக்குதல்களில் ஈரானின் விஞ்ஞானிகள் உட்படப் பல கல்வியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, ஈரானும் இஸ்ரேலும் மீண்டும் போரில் ஈடுபட்டிருப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
