இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை

இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை

இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உதவியுடன் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட சண்டைநிறுத்த உடன்பாடு ஜூன் 25ஆம் திகதி அமுலில் உள்ளது.

இரு நாடுகளும் வான்வெளித் தாக்குதல்களை நிறுத்துவதாக நேற்று தெரிவித்தன.

திரு டிரம்ப்பின் மத்திய கிழக்குத் தூதர், திரு ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது என்றும் நீண்ட கால அமைதி உடன்பாட்டுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் கூறினார்.

“நாங்கள் ஏற்கெனவே ஒருவருடன் ஒருவர் பேசுகிறோம். நேரடியாக மட்டுமல்ல சமரசப் பேச்சாளர் மூலமும் பேசுகிறோம். ஈரானை உயிர்ப்பிக்கும் நீண்டகால அமைதி உடன்பாட்டை எட்ட முடியும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளோம்,” என்று திரு விட்காஃப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வீரர்கள் ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை அழித்துவிட்டதாக திரு டிரம்ப் வார இறுதியில் கூறியிருந்தார். ஆனால் ஈரான் அவை அமைதிப் பயன்பாட்டிற்குரியவை என்று வலியுறுத்திவந்தது.

இஸ்ரேலுக்கு எதிரான அணுவாயுத அச்சுறுத்தலை தனது தாக்குதல் அகற்றிவிட்டதாகப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு ஜூன் 24 அன்று தெரிவித்தார்.

அதோடு ஈரான் புதுப்பிக்க முயலும் அணுவாயுதத் திட்டத்தை அழிக்க இஸ்ரேல் திண்ணமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

நாங்கள் நடப்பில் இருக்கும் இரண்டு உடனடி அச்சுறுத்தல்களை நீக்கிவிட்டோம். ஒன்று அணுவாயுத அழிவு, மற்றொன்று 20,000 தொலைதூர ஏவுகணைகளால் ஏற்படக்கூடிய அணுவாயுத அழிவு,” என்றார் அவர்.

ஈரானிய அதிபர் மசூட் பெசெ‌ஷ்கியன், ‘மாபெரும் வெற்றியுடன்’ போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதாக ஈரானிய ஊடகங்களிடம் கூறினார்.

அமெரிக்காவுடன் உள்ள வேறுபாடுகளுக்குத் தீர்வுகாண ஈரான் தயாராக உள்ளதாகவும் திரு பெசெ‌ஷ்கியன் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் சொன்னார்.

இஸ்ரேல் விமான சேவைகள் ஆரம்பம்
இஸ்ரேல் விமான சேவைகள் ஆரம்பம்

இதற்கிடையே, நாடளவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை புதன்கிழமை ஜூன் 24, பின்னிரவு 1 மணியுடன் இஸ்ரேல் நீக்கியதுடெல் அவிவ் அருகில் உள்ள நாட்டின் முக்கியமான பென் குரியோன் விமான நிலையமும் அதிகாரபூர்வாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

அதேபோல ஈரானின் ஆகாயவெளியும் மீண்டும் திறக்கப்பட்டதாக நோர்நியூஸ் செய்தி குறிப்பிட்டது.

ஈரானிய வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025