போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்

ஈரான் கோப்புப் படம்: இணையம்
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரோக்கி ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
எனினும், போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அதனால், ஈரான் மீது முழு அளவில் தாக்குதல் நடத்துமாறு தமது படைகளுக்குத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும், இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேல்தான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாகவும் அதன்படி பதில் தாக்குதலை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
