காலியான இடங்களைத் தாக்கிவிட்டு அமெரிக்கா வெற்றி முழக்கம்

காலியான இடங்களைத் தாக்கிவிட்டு அமெரிக்கா வெற்றி முழக்கம்

அணுவாயுதங்கள் எதுவும் இல்லாத காலியான இடங்களைத் தாக்கிவிட்டு அமெரிக்கா வெற்றி முழக்கம் செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தாக்குதல் நடத்திய இடங்களிலிருந்த அணுவாயுத மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிடடதாகக் கூறியுள்ள ஈரான், வெற்று இடங்களைத் தாக்கிவிட்டு அமெரிக்க வெற்றி முழக்கம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், அமெரிக்காவைப் பழிவாங்கும் நடவடிக்கையை ஈரான் எப்போது மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டு வருகிறது.

இந்த இரண்டாண்டு காலத்தில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போரில்கூடச் சந்தித்திராத பெரும் அழிவைத் தற்போது இஸ்ரேல் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025