இராஜதந்திரத்தைக் காட்டிக்கொடுத்த ஐநா சபை – ஈரான் சாடல்!

இராஜதந்திரத்தைக் காட்டிக்கொடுத்த ஐநா சபை

ஈரானின் அணுவாயுத மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் இராஜதந்திரத்தை ஐக்கிய நாடுகள் சபை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரோக்கி இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை மீது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா சென்றுள்ள அப்பாஸ் அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் திரு. அப்பாஸ் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

அமெரிக்கா அணுவாயுத நிலைகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதல் பற்றி ஈரான் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கடிதம் எழுதியும் இருக்கிறது.

இந்த நிலையில், ஈரான் -இஸ்ரேல் நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை ரஷ்யாவும் சீனாவும் கோரியுள்ளன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025