கிளிநொச்சியில் உயர்தர மாணவர்கள் பாராட்டு விழா

கிளிநொச்சியில் உயர்தர மாணவர்கள் பாராட்டு விழா

கிளிநொச்சியில் உயர்தர மாணவர்கள் பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது.

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்ச்சி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) கிளிநொச்சியில் நடைபெறுகிறது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்ச்சி இன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.

2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்று கௌரவிக்கப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களைப் பாராட்டுவதற்கு, ஜனாதிபதி நிதியம் தயாராகி வருகின்றது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025