கடுமையான நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து

கடுமையான நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து

கடுமையான நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து படம்: இணையம்

அமெரிக்காவில் கடுமையான நீரிழிவு நோயுள்ள சிலரிடையே நடத்தப்பட்ட சோதனை முயற்சி பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

பொஸ்டன் நகரில் உள்ள வெர்டெக்ஸ் மருந்து நிறுவனம் தான் தாயரித்த சோதனை மருந்தைக் கடுமையான நீரிழிவு நோய் (வகை 1) உள்ள 12 பேருக்கு ஓராண்டாகக் கொடுத்தது.

zimislecel என்ற அந்தச் சோதனையின் முடிவில் 12 பேரில் 10 பேருக்கு இன்சுலின் என்னும் ஊசி இனி போடத் தேவையில்லை. மீதமுள்ள இருவருக்குக் குறைந்த அளவில் இன்சுலின் போட்டால் போதும் என்று தெரிய வந்துள்ளது.

சோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடந்த அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பகிரப்பட்டது. பின்னர் மருத்துவத் துறைக்கான ஆய்வுப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டது.

இந்தச் சோதனையின் முடிவுகள் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளன. இன்சுலின் ஊசி இல்லாமல் சிகிச்சை பெறுவது மருத்துவத் துறையின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்று மருத்துவர்கள் கூறினர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025