அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது

ஈரானின் அணுவாயுத மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலானது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறிய நடவடிக்கையாகும் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இறைமையைப் பாதுகாக்க ஈரான் தேவையான எல்லாத் தெரிவுகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிவதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
