டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.
சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் நெருக்கடியின் போது அவரது “தீர்க்கமான இராஜதந்திர தலையீடும் முக்கிய தலைமையும்” இதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தப் பரிந்துரை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
