வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம்

அரியாலை வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம்

யாழ்ப்பாணம்- அரியாலை வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம் எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

வெள்ளிக்கிழமை 27 ஆம் திகதி கொடிச்சீலை கொண்டுவரப்பட்டுச் சனிக்கிழமை கொடியேற்றத் திருவிழா நடைபெறும்.

ஜூலை மாதம் ஆறாந்திகதி தேர்த்திருவிழா நடைபெறும். ஜூலை ஏழாந்திகதி தீர்த்தத் திருவிழா காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகி இரவு எட்டு மணிவரை நடைபெறும்.

ஜூலை எட்டாந்திகதி பூங்காவனத் திருவிழாவும் ஒன்பதாம் திகதி வைரவர் பொங்கலும் நடைபெறும்.

மகோற்சவ தினங்களில் மதிய பூசையைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெறும். கிரியைகளுக்கு வேண்டிய பால், தயிர், பூ, மாலை போன்றவற்றை அடியார்கள் வழங்கலாம்.

மகோற்சவ குரு: சிவாகம கிரிஜா நிதி சிவஶ்ரீ பாலசின்மயக்குருக்கள் – சீரணி, சண்டிலிப்பாய்

ஆலய அர்ச்சகர்: பிரம்மஶ்ரீ சண்முக மாதுள சர்மா

மகோற்சவ புஷ்பாலங்கார உபயம்: உ. பாலகிருஷ்ணன் ஐயா.

மங்கல இசை: ஈழ நல்லூர் ராஜன் குழுவினர்

ஒளியமைப்பு: விஜி லைற் (ம. விஜிதன்) அரியாலை

ஒலியமைப்பு: அம்பாள் சவுண்ட் & ராஜன் சவுண்ட் (ம. இராஜேந்திரன்) அரியாலை.

தவிரவும், திருவிழா மகோற்சவ காலத்தில் ஊர் பெருந்தகைகள், பொதுமக்கள் எனப் பலர் உபயம் வழங்கி ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திவ்ய மகோற்சவ விஞ்ஞாபனத்தைச் சிறப்பிக்கின்றார்கள்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025