போர் தீவிரமடைந்தால் இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

போர் தீவிரமடைந்தால் இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்தால் இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர், வர்த்தக நோக்கத்திற்காகச் சென்ற இருவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், இலங்கையர்கள் இருவர் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. எனினும், அவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் – போர் நிலைமை பற்றி அமைச்சர் ஹேரத் பாராளுமன்றத்தில் நேற்று விளக்கமளித்தார்.

இஸ்ரேலில் இலங்கையர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். ஈரானில் 35பேர் உள்ளனர். போர் தீவிரமடைந்தால், அண்டை நாட்டு விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்து வருவதாக அமைச்சர் கூறினார்.

இதுபற்றிச் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி இருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025