ஈரான் விவகாரமாக ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை

ஈரான் கோப்புப் படம்: இணையம்
இஸ்ரேல் – ஈரான் விவகாரமாக ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வெடித்திருக்கும் போரைத் தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று கூடுகின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்கிறாரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஜெனீவாவில் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்.
இஸ்ரேல் – ஈரான் நாடுகள் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதால் இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
