ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்

ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்சிகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்றுக் காலை நடைபெற்றன.

நாடு முழுவதிலுமுள்ள (ஒன்பது மாகாணங்களிலும்) 113 ஆயுள்வேத மருத்துவமனைகளில் நிகழ்ச்சிகள் காலை 8.30 முதல் 9.30 வரை நடைபெற்றன.

சுகாதார அமைச்சின் ஆயுள்வேத மருத்துவப் பிரிவு சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.

மருத்துவமனைகள் தவிர்ந்த நான்கு பல்கலைக்கழகங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன

நாளை ஜூன் 21 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

அதேபோன்று கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய இடங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அந்தந்த பகுதி தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025