நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும்

நாகை - யாழ் கப்பல் சேவையில் ஈடுபடும் கப்பல் - படம் இந்திய உயர்ஸ்தானிகராலயம்
நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஓகஸ்டில் ஆரம்பமான இந்தக் கப்பல் சேவை சீரற்ற காலநிலை உள்ளிட்ட பல காரணங்களால் அடிக்கடி தடைப்பட்டது.
நேற்றைய தினத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கப்பல் சேவையைத் தொடர்வதற்கு உதவியளிக்கும் வகையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மேலும் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரூபாயில் 25 மில்லின் ஒதுக்கப்ப்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கப்பல் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
