ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்கின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிவு முதல் 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு உள்ளிட்ட நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நிர்வாக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

ரயில் அதிகாரிகளுடன் இன்று இடம்பெறும் கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025