டிரம்ப் ஈரானுக்கு எதிராகக் களமிறங்க அமெரிக்க மக்கள் எதிரப்பு

டிரம்பின் வரி விதிப்பு கடிதங்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராகக் களமிறங்க அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போரில் இருதரப்புக்கும் இடையில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிழந்து ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை சேதமடைந்துள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகக் களமிறங்கினால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் சுட்டிககாட்டியுள்ளனர்.

ஆதலால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகக் களமிறங்குவதை அவரது ஆதரவாளர்களும் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலமொன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டுவருவது பற்றி எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025