காசாவில் 24 மணித்தியாலத்தில் 140 பேர் படுகொலை

gaza

காசாவில் 24 மணித்தியாலத்தில் 140 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய காசா பகுதியில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட உதவி லொறிகளில் இருந்து உணவு பெறக் காத்திருந்த மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025