எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் றொக்கட் வெடித்துச் சிதறியது

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் றொக்கட் வெடித்துச் சிதறியது

அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் றொக்கட் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பை ஏற்படுத்தியது.

ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு றொக்கட் ஆகும்.

அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை றொக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025