கெஹலியவுக்கு மே20 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் கெஹலிய, மனைவி, மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மகள் ஆகியோர் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் இன்று (18) காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க வந்தனர்.

அறிவிக்கப்படாத சொத்துகளை ஈட்டுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்லவும் மேலும் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025