நுவரெலியா மாநகர சபையில் தேமச ஆட்சி

நுவரெலியா மாநகர சபையில் தேமச ஆட்சி அமைத்துள்ளது.
நுவரெலியா மாநகர சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் மேயர், பிரதி மேயர் தெரிவு 18.06.2025 இன்று காலை நுவரெலியா மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா சபையின் பிரதி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 14 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 14 வாக்குகளை பெற்று சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட உபாலி வனிகசேகர தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட சுயேச்சைக் குழு உறுப்பினர் அஹகம ராமநாயகலாகே அஜித் குமார 11 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.



இந்த மாநகர சபைக்கு பிரதி மேயர் தெரிவு செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வீரமலை இளையராஜாவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சிவன்ஜோதி யோகராஜாவும் போட்டியிட்டனர்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சிவன்ஜோதி யோகராஜா 14 வாக்குகளைப் பெற்று பிரதி மேயராகத் தெரிவானர்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வீரமலை இளையராஜா 11 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
- நுவரெலியா மாநகர சபை 25 உறுப்பினர்களை கொண்டது.
- தேசிய மக்கள் சக்தி – 12
- ஐக்கிய மக்கள் சக்தி – 04
- ஐக்கிய தேசியக் கட்சி – 03
- சுயேட்சை – 03
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01
க. கிருஷாந்தன்
