நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் அமுதவிழா

நல்லூர் சங்கிலியன் மாளிகை
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் அமுதவிழா (80ஆவது ஆண்டுவிழா) நிறைவு நிகழ்ச்சிகள் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன.
ஜூன் 21ஆம் திகதி நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்திபன் கலந்துகொள்கிறார்.
ஜூன் 22ஆம் திகதி நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். மாநகர முதல்வர் கலந்துகொள்ளும் முதலாவது நிகழ்ச்சி இதுவாகும்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை 6.30 இற்கு ஆரம்பமாகும். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.
-நல்லூர் சங்கிலியன் மன்றம்
